SDJF. Powered by Blogger.

Thursday, October 27, 2011

பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுக்கும் பலதார மணம்!


அணுசரனை வழங்கும் முஸ்லிம் தனியார் சட்டம்
முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவோ சிறுபான்மையாகவோ வாழும் நாடுகளில் இஸ்லாமிய ஷாஆ சட்டங்களின் கீழ் அவர்களுடைய குடும்ப உறவு விவகாரங்களை நெறிப்படுத்தும் விதத்திலான தனியான இஸ்லாமிய சட்டம் அமுலில் இருப்பதை நாம் யாவரும் அறிவோம்.  இலங்கையில் உள்ள இத்தகைய சட்டம் இலங்கை முஸ்லிம் தனியாட் சட்டம் எனப்படுகின்றது. 

இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டம் 18ஆம் நூற்றாண்டு தொடக்கம் நீண்ட வரலாற்றைக் கொண்டது.  இப்போது நடைமுறையில் இருப்பது 1951ஆம் ஆண்டு 13ஆம் இலக்க விவாகஇ விவாகரத்துச் சட்டம்.  கடந்த 6 தசாப்தங்களாக இந்தச் சட்டத்தில் பொரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது மாறிவரும் சமூக ஒழுங்குக்கு ஏற்ப இந்தச் சட்டம் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் நெகிழ்ச்சியை கொண்டிருக்கவில்லை என்பதே அர்த்தம்...
இப்போது நடைமுறையில் உள்ள சட்டம் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை உறுதிப்படுத்தும் விடையத்தில் செற்திறன் குன்றியதாகவே காணப்படுகின்றது.  வன்முறைகளுக்கு அல்லது அநீதிக்கு உட்படும் பெண்ணுக்குத் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் ஆற்றல் இந்தச் சட்டத்திற்கு குறைவாகவுள்ளது. இந்நெகிழ்;ச்சிப் போக்கானது ஆண்களுக்கான சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதாக அமைகின்றது.  குறிப்பாக பலதாரமணம் தொடர்பில் இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் கொண்டிரக்கின்ற நிலைப்பாடுகள் காலத்தின் தேவையை புர்த்தி செய்யாதமை பலதார மணம் தொடர்பான தவறான கருத்துக்கள் நிலவுதற்கு வழிகோலியுள்ளன.


அபிவிருத்திக்கான ஊடகவியலாளா; மன்றம் அண்மையில் மேற்கொண்ட நோர்காணல்இ சமூகவியல் ஆய்வு மற்றும் கிராமிய மக்களுடனான கலந்துரையாடல் என்பனவற்றை அடிப்படையாக வைத்து நோக்கும் பொழுது பலதாரத் திருமணம் தொடர்பாக பின்வரும் நிலைப்பாடுகளை அவதானிக்க முடிந்தது.

1. பலதார மணம் என்ற அழகிய வழிகாட்டல் இன்று அதிகம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது.  விவாகரத்துக்களில் 80 வீதமானவை பலதார மணத்துடன் தொடர்புடையன.  இவற்றில் அனேகமானவை இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற பலதார திருமண சட்ட திட்டங்களுக்கு முற்றிலும் முரனான விதத்தில் நடந்துள்ளன.
2. பலதார திருணம் ஆண்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட ஒரு விசேட சலுகை என்ற நம்பிக்கை அதிகமான ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் நிலவுகின்றது
3. பலதார திருமணத்திற்கான அனுமதி இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ளதால்இ அதில் அண்கள் விரும்பி விதத்தில் ஈடுபடலாம் என்ற நம்பிக்கை நிலவுகின்றது
4. பலதாரத் திருமணம் தொடர்பான இஸ்லாத்தின் உண்மையான நிலைப்பாட்டினையும் அதன் பின்னால் உள்ள சமூதாயத் தத்துவம்இ இறுக்கமான நிபந்தனைகள் என்பன மக்களுக்கு மேலெழுந்தவாரியாகவே விளக்கப்பட்டுள்ளன. 
5. குர்ஆன் வழங்கிய அனுமதி நோக்கப்படுமளவுக்கு அது வலியுறுத்தும் தத்துவம் நோக்கப்படுவதில்லை.  அதாவது பலதார மணத்தை தமக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள நினைப்பவாகள் பலதாரத் திருமணம் கொண்டுவரும் சமத்துவத்தை அசட்டை செய்வதுண்டு.  
6. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாமிய தனியார் சட்டம் (விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்) கொண்டுள்ள நெகிழ்ச்சியான போக்கு பலதாரத் திருமணத்தினை ஒரு சமூகப் பிரச்சினையாக இட்டுச் சென்றுள்ளது. 

பலதாரத் திருமணம்
அநாதை(பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அவர;க)கள் விடயத்தில் நீதம் செய்ய முடியாது என்று நீங்கள் அஞ்சினால்இ (மற்றப்) பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாவோஇ மும்மூன்றாகவோஇ நன்னான்காகவோ நீங்கள் திருமணம் செய்துகொள்ளுங்கள். அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள முடியாதென நீங்கள் பயந்தால்இ ஒரு பெண்ணை (திருமணம் செய்து கொள்ளுங்கள்) அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட  (அடிமைப் பெண்களில் உள்ள) தை(க் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் அநீதி செய்யாமலிக்க இதுவே சுலபமா(ன) வழியாகும். (சூறா அந்நிஸா 4:3)
பலதாரத் திருமணத்திற்கு இந்த அல்குர்ஆனிய வசனமே பெரும்பாலும் ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது. இங்கு மிக முக்கியமான நிபந்தனையொன்றின் பேரிலேயே பல தாரத் திருமணத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது நீதியை நிலைநாட்டல்இ மனைவிமாருக்கிடையில் நீதியாக நடந்துகொள்தலஇ நீதியை நிலைநாட்டுதல் என்பதை அந்த நிபந்தனை. இந்தக் குர்ஆன் வசனத்தை விளக்கும் கலாநிதி ஜமால் பதாவி POLYGAMY IN ISLAMIC LAW  எனும் நூலில் பின்வருமாறு எழுதுகின்றார்

1. பலதாரத் திருமணம் கட்டாயமானதோஇ ஊக்குவிக்கப்பட்டதோ அல்ல. மாறாக அது அனுமதிக்கப்பட்டது.
2. இது ஒரு ஆணின் தனிப்பட்ட திருப்தி அல்லது விருப்பத்தை நிறைவேற்றும் ஒன்றல்ல. மாறாக சமூகத்தில் உள்ள விதவைகள் அநாதைகளின் நலன் குறித்தது. அத்தோடு இந்த அல்குர்ஆன் வசனம் இறங்கிய சமூக சந்தர்ப்பத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கப்பட வேண்டியது.
3. அவ்வாறான சந்தர்ப்பத்திலும் இந்த அனுமதியானது மிகவும் நிபந்தனைகளுக்குட்பட்டது.
4. இங்கு வலியுறுத்தப்படும் நீதி அல்லது நியாயம் என்பத பொறுப்புடையது. இது வீடு உணவு உடை குழந்தைப் பராமரிப்பு  எனப் பலவற்றை உள்ளடக்குகின்றது.  இத்தகைய விடயங்களில் நியாயமாக நடந்துகொள்ள முடியாவிட்டால்இ அல்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது ஒரு பெண்ணைத் திருமணம் செயுங்கள் என்று.

உண்மையில் பல தாரத்திருமணம் என்பதை இஸ்லாம் மிக நோர்த்தியான இறுக்கமான சமுதயாத் தத்துவங்களுடன் அனுமதித்துள்ளது.  அதேநேரம்இ தவிர்க்க முடியாத சமூக சந்தர்ப்பம் என்றிற்கு ஈடுகொடுக்கும் விதத்திலன்றிஇ நிபந்தனைகள் அன்றி இந்த அனுமதி வழங்கப்படவில்லை. அத்தோடுஇ ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமாரிடத்தில் நீதமாக நடந்து கொள்தல் என்பது இலகுவான காரியமல்ல என்பதையும் இஸ்லாம் வெளிப்படையாக உணர்தியுள்ளது.

அதே அத்தியாயத்தில் இன்னும் நீங்கள் (உங்கள்) மனைவியருக்கிடையில் எவ்வளவு விரும்பிய போதிலும் நீதமாக நடக்க நீங்கள் சக்திபெறவே மாட்டிர்கள். ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து  (மற்ற) அவளை (அந்தரத்தில்) தொங்கவிடப்பட்டவளைப் போல விட்டுவிடாதீர;கள். இன்னும் நீங்கள் சமாதானமாக நடந்து கொண்டுஇ (அல்லாஹ்வையும் பயந்து) கொண்டால் அப்போது நிச்சயமாக அல்லாஹ் ( உங்கள் குற்றங்களை) மிக மன்னிப்பவனாக இ மிகக் கிருபையுடையவனாக இருக்கின்றான். (சூறா அந்நிஸா 4:129)

சாதாரண வருவாயுள்ள ஒருவர் இரண்டு அல்லது அதற்கு மேல் மனைவிமாரை திருமணம் செய்து கொண்டு அவர;களுக்கிடையில் நீதம் செலுத்துவது எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியமானது என்பது யாரும் இலகுவில் அறிந்து கொள்ளலாம். மேற்படிக் குர்ஆன் வசனம் சமமாக அன்பு செலுத்துதல் சிரமமானது என்பதை வெளிப்படையாகவே சொல்கின்றது. 

இந்த ஆல்குர்ஆன் வசனம் இறங்கிய சமூகசந்தர்ப்பத்தை புரிந்து கொள்வது பலதாரத் திருமணம் எவ்வளவு தூரம் இறுக்கமானது என்பதை அறிந்துகொள்ளலாம்.  உஹது யுத்தம் நடந்த பின்னணியில் பல ஆண்கள் ஷகீதாக்கபட்டார்கள்.  அவர்களின் மனைவிமார் விதவைகளானார்கள். இந்த இடத்தில் அத்தகையவர்களுக்கு வாழ்வளிப்பது உயிர்வாழும் முஸ்லிம்களின் கடமையாக அமைந்தது என்பார் அல் ஹூமதா எனும் அறிஞர் இவரது கருத்து பலதாரத் திருமணம் ஒரு நிர்ப்பந்த சூழ்நிலைக்கான நீர்வாக இவ்வசனம் அருளப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகின்றது. (பார்க்க ...(Abd Al-Ati, Hammuda, Islam in Focus, The Canadian Islamic center, Edmonton Alberta, Canada, 1963, p.103.)  அதமாத்திரமன்றி உஹது யுத்த நிகழ்வோடு ஆண் பெண் எண்ணிக்கையில் பாரிய அசமத்தன்மை ஏற்பட்டது.  இவ்வாறான அசமத்தன்மை ஒழுக்க ரிதியான பலம் மனித நேயத்தை வெளிப்படுத்தல் விதவைகளுக்கு வாழ்வளித்தல் என்று பல தத்துவங்களை இது உள்ளடக்குகின்றது.

இஸ்லாம் பலதார மணத்துக்கு வழங்கும் அனுமதியானது அது ஆண்களை தனித்து ஆதாரிக்கின்றது என்ற அர்த்தத்தில் எவ்விதத்திலும் பொருள் கொள்ள முடியாது. அது ஆண்களுக்கு வரப்பிரசாதமாக வழங்கப்பட்டதுதல்ல. பெண்களுக்கு எதிராக வழங்கப்பட்டதுமல்ல. அறிஞர் ஆயதல்லா இப்ராஹீம் இது பற்றிக் குறிப்பிடும் போது  ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான சில நலன்களைக் கருத்திற் கொண்டே வழங்கப்பட்டுள்ளது.  இது பெண்ணுடைய உரிமையைக் கண் மூடித்தனமாகப் பார்க்கவும் இல்லை (Women Rights in Islam> May> 2006> 94).

இன்று சமூகத்தில் திருமணமாகாத ஆண்களின் தொகையை விட திருமணமாகாத பெண்களின் தொகையே அதிகம். புதல்வர்களாக இருக்கும் ஆண்களின் எண்ணிக்கையை விட விதவைகளாக இருக்கும் பெண்களின் தொகையே அதிகம்.  அதை விட ஆண்களின் பிறப்பு விகிதத்தை விட பெண்களின் பிறப்பு விகிதம் அதிகம்.  இளவயதில் ஏற்படும் மரணங்களும் அதிகம் சம்பவிப்பது ஆண்களில் (Women Rights in Islam> 2006> 58)  போன்ற காரணங்களை முன்னிறுத்தி பலதாரமணம் பெரும்பாலும் நியாயப்படுத்தப்படுவதுண்டு.

எனவே பலதாரத் திருமனம் என்பது ஒரு சட்டமோ அல்லது இன்றியமையாததோ அல்ல. அது ஒரு விதிவிலக்கு.  Khutbah Al-Juma  என்ற சஞ்சிகையில் கலாநிதி இம்ரான் அல் ஹக் எழுதும் ஒரு விடயம் முக்கியமானதாகத் தெரிகின்றது. இஸ்லாம் பலதாரத் திருமணத்தை ஆதரித்திருப்பது ஆண்களின் விருப்பத்தை புர்த்தி செய்வதற்கல்ல. பெண்களதும் அநாதைகளதும் நல்வாழ்வைக் குறித்தே இந்த அனுமதி வழக்கப்பட்டது. (January 19, 2007, by Dr. M. Imran Al-Haq, Kashiwa Islamic Cultural Society)

சில நிபந்தனைகளும் நடைமுறை வளக்காறுகளும்
மனைவி சுகயினமுற்றிருக்கிறாள் அது சுகப்படுத்த முடியாத வருத்தமாக இருக்கிறது.  ஒரு குழந்தையைச் சுமக்குமளவுக்கு அவளுக்கு தேக ஆரோக்கியம் இல்லை.  ஆனால் கணவனுக்கு குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது என்ற நிலையில் மறுதாரமணத்திற்கான அனுமதி ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. ஆனால் இலங்கை  அபிவிருத்திக்கான ஊடகவியலாளார் மன்றம் சேகரித்த 30 விதவைகளில் ஒன்று கூட இவ்வாறானதாக இருக்கவில்லை. மனைவியின் சுகயீனம் ஆரோக்கியக் குறைவு அல்லது குழந்தைகளை பெற்றுக்கொடுக்க அவளுக்குள்ள இயலாமை ஆகிய காரணங்களினால் மிகவும் அரிதாகவே பலதார திருமணங்கள் இடம்பெறுகின்றன. சேவை முதிர்ச்சி மிக்க காதிமார்களிடம் மேற்கொண்ட நேர்காணலின் போது இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஓரிரண்டு மாத்திரமே இடம்பெற்றுள்ளன.

எவ்வாறாயினும்இ இவ்வாறானதொரு நெகிழ்ச்சியை பயன்படுத்தி அநியாயமாக பல திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு காதியாரும் உடந்தையாக இருந்துள்ளார;. அக்குரணையில் இடம்பெற்ற ஒரு சம்பவம் தோட்டத்தில் உள்ள பிலாமரம் ஒன்றினை தறிப்பதற்கு அனுமதியளிக்காமையைக் காரணமாகக் காட்டி காதியார் விவாகரத்து வழங்கி அற்கான அறிவித்தல் கிடைக்க முதலே மறுமணம் செய்திருக்கின்றார் இந்த தீர்மாணம் எடுக்கப்பட முன்வைக்கப்பட்ட காரணம் மணைவி சுகயீனமற்றிருக்கிறாள் அதனால் குழந்தைகளைப் பெற்றுத்தர அவளால் முடியாது என்பதாகும். எப்படியோ காதியாரின் உத்தியோக புர்வ தீர்ப்பினை வெளியிடுவதற்கு முன்னர் அதனை குறித்த ஆணுக்கு அவர் வழங்கயுமிருக்கின்றார் அதனைப் பயன்படுத்தி குறித்த ஆண் மறுமணமும் செய்துள்ளார். இத்தனைக்கும் காதிமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்தத் தகராறு குறித்த வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற இன்னுமொரு சம்பவத்தில் இறுதித் தீர்மாணத்தை எடுக்கும் அமர்வினை ஆணுக்கு சாதகமாக எடுத்து அவருக்கு மறுமணத்திற்கான அனுமதியை வழங்குவதற்காக தவறான அல்லது பாவனையில் இல்லாத முகவரிக்கு காதியார் அழைப்புக் கடிதத்தினை அனுப்பியுள்ளார் இப்போது விவாகரத்துப் பெற்ற மனைவி குழந்தை பராமரிப்புக்கும் வழியில்லாமல் துன்பப்படுகின்றார். நாம் அவரை நேர் கண்டபோது ‘என்ன எங்கட காதியார்ட மட்டும் போகச் சொல்லாதிங்க. அவர் நான் சொல்ற எதையும் கேக்க மாட்டாரு. மூஞ்சில பாஞ்சி விழுறாரு’ என்றார். எல்லாவற்றையும் விட சங்கடமான செய்தி என் னவென்றால் புதிய மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது முதலாம் மனைவிக்கு ஹோன் அடித்துக் காட்டி விட்டுச் செல்கின்றாராம் கணவர். இது நீதியை நாட்டுதல் என்ற இஸ்லாமிய நெறிமுறைக்கு முற்றிலும் சேறுபுசுவதாகும்.

திருமணமாகாத ஆண்கள் விதவைகளை மிக அரிதாகவே திருமணம் செய்கின்றனர்.  திருமணமாகி இன்னொரு மனைவியுடன் வாழ்கின்றவர் அல்லது பிரிந்திருப்பவர் அல்லது மனைவியை தலாக் செய்த ஒருவர் தான் பெரும்பாலும் விதவைகளில் நாட்டம் கொள்கின்றனர்.  இந்த இடத்தில் விதவைக்கு வாழ்வளித்தல் என்பது மிகக் குறைவாகவே அழுத்தப்படுகின்றது.  உண்மையில் விதவைக்கு வாழ்வளித்தல் என்ற தத்துவத்துடன் பலதார மணம் இன்று பயிலப்பட்டு வருதற்கான மிகக் குறைவான் சான்றுகளே கிடைக்கின்றன.

பெண் நோயுற்றிருக்கிறாள் அந்த நோயின் தன்மையினால் கணவனின் உடலியல் தேவையினை நிவர்த்திக்கும் ஆற்றலும் இயலுமையும் அவளிடம் இல்லை.  ஒருவர் மறுதாரத்தை நாடுவதற்கான ஏற்புடைமையாக இதனைக் கொள்ளலாம்.  இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளார் மன்றம் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம்  எமது தரவுகளுக்கு ஏற்ப ஒரு மறுமணம் கூட இந்த அடிப்படையில் இடம்பெறவில்லை.  இதுபோன்ற பல சம்பவங்கள் எம்மிடம் இருக்கின்றன. காலஒட்டத்தில் அவை பற்றி எழுத முயற்சிக்கின்றோம். இனி பலதார திருமணத்தை முஸ்லிம் தனியார் சட்டம் எவ்வாறு ஊக்குவிக்கின்றது என்பதை நோக்குவோம்.

சாதகமான சட்டம்
முஸ்லிம் தனியார் சட்டத்தின் சரத்து 24 (1) - (4) இரண்டாவதுஇ மூன்றாவது அல்லது நாலாவது மறுதார திருமணத்தை நாடும் ஒரு ஆண்இ தான் அவ்வாறு எண்ணியுள்ளதை தனது பகுதிக்குப் பொறுப்பான காதியிடம் தெரியப்படுத்த வேண்டும். அத்தோடுஇ தான் அப்போதைய நிலையில் வாழும் பெண் அல்லது பெண்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காதியாருக்கும் தான் திருமணம் செய்ய எண்ணியுள்ள பெண் வாழும் பகுதியில் உள்ள காதியாருக்கும் அறிவிக்க வேண்டும். இத்தகைய திருமணத்தை காதியார் அத்தாட்சிப் பத்திரம் ஒன்றை அல்லது விருப்புக் கடிதம் கிடைத்தமையை அறிவிக்கும் பத்திரம் ஒன்றை வழங்காதவரை பதிவு செய்ய முடியாது. ஆனால்இ இத்தகைய நிலையில் பதிவு செய்யாமல் ஒரு திருமணம் இடம்பெற்றால் திருமணம் வலிதற்றதாகாது.

இன்று அதிகமான பெண்களை கதியற்று நிக்கச் செய்தது மேற்குறித்த சட்டமாகும். இறுக்கமான நிபந்தனைகளை விதித்துவிட்டு அவற்றை மீறினாலும் திருமணம் கூடும் என்றிருந்தால் அவ்வாறான சட்டம் இருப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. அல்லது ஆண்களுக்கு மாத்திரந்தான் பிரயோசனம். இப்படியொரு சட்டம் உள்ளவரை ஆண்கள் தங்குதடையின்றி திருமணம் செய்யலாம். சிவில் சட்டமும் அதனைக் கண்டு கொள்ளாது. முற்றிலும் பாலியல் நோக்கத்திற்கா பலதார மணத்தில் ஈடுபட்;டு மனைவிமாரை வன்முறைக்கு உற்படுத்தும் கணவர்களை நியாயம் கேட்கும் வாய்ப்பினை இச்சட்டம் இல்லாது செய்கின்றது. ஒருவர் பதிந்தோ பதியாமலோ செய்யும் திருணம் வலிதாகும் என்றால் பதிந்தால் என்ன பதியாவிட்டால் என்ன?

இது இப்படியிருக்க பலதார மணத்தை நாடும் ஒருவர் அதற்கு தகுதியுடையவராக இருக்கின்றாரா? என்பதை பரீட்சிப்பதற்கு இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தில் எந்த ஏற்பாடுகளும் இல்லை. பதிவு செய்பவர் நினைத்தால் வெகு சுலபமாக திருணம் நடக்கும். இந்த விடையத்தில் முஸ்லிம் தனியார் சாட்டம் கடந்த 50 ஆண்டுகளாக மௌனமாக இருந்து வருகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றும் ஒரு காதியார் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த போது குறுனாகலில் ஒரு பதிவாளர் இருக்கின்றார். இன்னொருவரினம் பொண்டாட்டியை கொண்டு போனாலும் அவர் பதிந்து தருவார். அவர் போல பலர் இருக்கின்றார்கள். அத்தனை விடயங்கள் பற்றியும் என்னிடம் ஆதாரம் இருக்கின்றது என்றார். குறித்த காதியார் எமக்கு வழங்கிய பேட்டியை துணையாகக் கொண்டே இதனை எழுதுகின்றோம். ஆய்வு நோக்கங்களுக்காக அவற்றை நாம் யாருக்கும் தந்துதவலாம். இங்கு குறிப்பிடவரும் விடையம் யாதெனில் இத்தகைய அதிகாரிகள் பதவியில் இருந்தால் முஸ்லிம் பெண்கள் எவ்வாறு நிம்மதியாக வாழ முடியும் என்பதுதான்.

அல்குர்ஆன் பலதாரமணத்தை அனுமதித்த போது மனைவிமாருக்கிடையில் நீதி நிலைநாட்டப்படுவதையை முதன்மைக்காரணியாக முன்னிறுத்துகின்றது. அனால் இலங்கை அபிவிரத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் மேற்கொண்ட ஆய்வில் முதல் மனைவிக்கான நியாயம் பெரும்பாலான  இரண்டாம் மூன்றாம் திருமணங்களின் போது மறுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. புல்மோட்டை கொழும்பு பொலன்னறுவை மாத்தளை ஆகிய இடங்களில் இருந்து பதிவான சம்பவங்கள் இதற்கு உறுதியான சான்றுகளாக உள்ளன.

பலதார திருமணங்கள் அதிகமாக இடம்பெறும் சந்தர்ப்பங்கள்.
முறைகேடான தொடர்புகள் பாலியல் நாட்டம் ஏமாற்றிப் பணம் பெறுதல் போன்ற காரணங்களுக்காகவே இன்று அதிகமான பலதாரத் திருமணங்கள் இடம்பெறுகின்றன. சிறு பிணக்கு காணிப் பிணக்கு சீதனப் பிணக்கு என்பன பலதாரத் திருமணத்தை ஏற்படுத்தும் சமூகக் காரணிகளாகும். ஆகவே பலதார மணத்தின் அனுமதி என்பது நீதி சமத்துவம் நடைமுறைச் சாத்தியம் ஆகிய கருத்துக்களைக் கவனத்திற் கொண்டே இடம்பெற வேண்டும். அத்தோடு ஒரு ஆணின் அடங்காத்தனமான இச்சையை தீர்ப்பதற்காக பலதார மணத்திற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை.  இதுவிடையத்தில் அண்கள் மறுதார திருமணத்தை நாடினால் அதற்கு அவர்கள் தகுதியானவர்ளா என்பதை அத்தாட்சிப்படுத்தும் இறுக்கமான சட்டம் இலங்கையில் கொண்டுவரப்படுவது காலத்தின் தேவையாக உள்ளது.


எம்.சீ ரஸ்மின்

1 comment:

  1. கட்டுரை வாசித்தேன் பூரித்துப் போனேன் பலதார மணம் பற்றி ஒரு ஆண் மகனே இப்படி எழுதி இருக்கானா?என்பது தான் எனது பூரிப்புக்கான காரணம் .இன்று முஸ்லிம் சமூகத்தில் எழுந்திருக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாக காணப்படுகிறது .எப்படியும் எங்களால் திருமணம் பண்ண முடியும் என்றே பல ஆண்கள் திமிராக பேசிக்கொள்கின்றனர் .அப்படியானவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பகுதியாக இவ்வம்சம் காணப்படுகிறது .பலதார மணம் பற்றிய பிழையான எண்ணங்களை இவ்வாறான கருத்துப் பரிமாறல்கள் மூலமே மாற்றலாம் .

    ReplyDelete