SDJF. Powered by Blogger.

Thursday, October 27, 2011

எம்மைப்பற்றி...

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தின் மற்றுமொரு செயற்றிட்டமே Radio For free voices பெண்களின் குரலாகச் செயற்பட்டு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைச் சுட்டிக்காட்டி, பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையும் சமூகக் காரணிகளில் பாதிப்புச் செலுத்தி, பால்நிலைச் சமத்துவத்தை ஏற்படுத்துவதை இலக்காக் கொண்டே இச்செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. முதற்கட்டமாக, முஸ்லிம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளிக்கொணரும் பணியினை இச்செயற்றிட்டம் செய்ய முற்படுகின்றது. இலங்கையில் முஸ்லிம் பெணகளின் முன்னேற்றத்திற்குத் தடைகள் உள்ளன. சிந்தனை ரீதியான பிரச்சினைகள், சட்டத்தில் உள்ள தடைகள் ஏற்றத்தாழ்வுகள், நிறுவனரீதியான பிரச்சினைகள்,  கருத்தியல் ரீதியான சிக்கல்கள் என பலவற்றைக் குறிப்பிடலாம். இவை பற்றிய உரையாடல்களை நிகழ்த்தி, துறைசார்ந்தவர்களுடன் சந்திப்புக்களை நிகழ்ச்சி, மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பெண் மேம்பாடு குறித்த பணிகளை முன்னெடுக்கும் ஊடகத்தளமாக இது செயற்படும். உங்கள் பிரதேசத்தில் இடம்பெறும் சம்பவங்கள், பிரச்சினைகளை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்த இந்த தளத்தை நிங்கள் பயன்படுத்தலாம். 





















































































































No comments:

Post a Comment