SDJF. Powered by Blogger.

Thursday, October 27, 2011

பெண்களை இலகுவில் ஏமாற்ற வழிசொல்லும் ஆண்கள்

பெண்களின் தனிமை, அவரகளின் பொருளாதார ரீதியான பலவீனம், அதிகாரமற்ற நிலை, பெண்கள் மீது ஆண்கள் சமயத்தின், பண்பாட்டின் பேரில் சமூகம் கொண்டுள்ள அழுத்தமான பார்வை என்பனவற்றைக் முன்னிறுத்தி இலகுவில் பெண்களை வன்முறைக்குற்படுத்தும் பழக்கமும் அவர்;களை விவாகரத்துச் செய்யும் பழக்கமும் இன்று ஆண்கள் மத்தியில் பெருகிக்கொண்டு வருகின்றது.

அண்மையில் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் மேற்கொண்ட ஒர் ஆய்விலிருந்து இது தெரியவந்துள்ளது.
பொருளாதார வசதிகொண்ட ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து, மாமியின் அன்பினையும் மனைவியின் சுகயீனத்தையும் சாட்டாக வைத்து மாமியின் வீடு, நகைகள், காசு பொருட்கள் எல்லாவற்றையும் அபகரித்து விட்டு, இறுதியில் மனைவிக்கு சுகயீனம் என்ற காரணத்தைக் காட்டி விவாகரத்துப் பெற்றுக்கொண்ட ஒரு முஸ்லிம் இளைஞனின் சம்பவத்தை நோக்கலாம்.
கண்டி மாவட்டத்தில் 17 வயது பெண்பிள்ளைக்கு திருமணம் இடம்பெறுகின்றது.


திருமணமாகி சிறிது காலத்தில் அவள் நோய்வாய்ப்படுகின்றாள். மருத்துவ அறிக்கைளுக்கு ஏற்ப இது ஒரு பாரதூரமான வருத்தமோ, அல்லது அதிகம் பயப்படும் படியான வருத்தமோ இல்லை. ஆனால், என்ன வருத்தம், வைத்தியர் என்ன சொன்னார், மருத்துவ அறிக்கைகள் என்ன கூறுகின்றன என்பனவற்றை வெளிப்படுத்தாமல் வைத்திருந்த கணவன் தன்னிஷ்டப்படி அவற்றை மாற்றி திரிபு படுத்தி பகிரங்கப்படுத்திவிட்டார்.

அந்தப் பெண்ணுக்கு ஏதோ பெரிய வியாதியாம், கணவனுக்கு மட்டும் தான் தெரியுமாம்.  மருத்துவ அறிக்கைகள் எல்லாம் வெளியே காட்டினால் மனைவிக்கு சரியில்லை என்பதால் கணவர் அவற்றை மறைத்துவைத்திருக்கின்றாராம் என்று கதை பரவிட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் வெளிநாட்டிலிருக்கும் மாமனாரிடமும் அதிக நகைகளை வைத்திருக்கும் மாமியாரிடமும் முறைப்படி வசூலித்துக் கொண்டார் மாப்பிள்ளை. கடைசிக்கட்டம் வரை தன் மகளுக்கு என்ன வருத்தம் என்று பெண்ணின் தாயாருக்குப் புரியவே இல்லை. ஆனால், வயிற்றில் பெரிய கட்டியாம், வயிற்றுக்குள் ஏதோ பெரிய புற்றாம், சொல்லேலாத வியாதியாம் என்றுதான் தாயும் நம்பினார்.

சிலநாட்களில் அந்த இளம் பெண் இறந்து விடுவாள் என்று அதற்கான நாளையும் மாப்பிள்ளை குறித்துவிட்டார். அந்த மனைவி இறக்கப் போகும் நாளை எண்ணி எண்ணி தயார் உள்ள சொத்துக்களையெல்லாம் இறைக்கவும் துணிந்தார். அந்த வீடு சிறிது நாளில் மரண வீடு போல மக்கள் வருவதும் போவதுமாக இருந்தது.

உண்மையில் அந்த மனைவிக்கு வேரொன்றும் இல்லை. தண்ணீர் கட்டி. சிறிய வயதிலும் இதற்கு ஓரிருதடவைகள் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். மாத்திரைகளால் இலகுவில் குணப்படுத்தக் கூடியதே இந்த வியாதி. இதனை ஒரு கட்டத்தில் ஒப்ரேசன் வரை மாப்பிள்ளை கொண்டு சொன்றார். பல விசேட வைத்தியர்களிடம் மாமியார் விசாரித்த போது ஒபரேசன் இல்லாமல் லேசர் ரீட்மன்ட் மூலம் இந்த வருத்தத்தை இலகுவில் குணப்படுத்தலாம் என்றே கூறியுள்ளனர். ஆனால், மாப்பிள்ளை ஒபரேசன் வரை சென்று விடயத்தை ஒரு பெரிய மேட்டராக மாற்றிவிட்டார்.

காதியாரிடம் சென்று ஒரு நோய்கார மனைவியுடன் வாழமுடியாது எனவே விவாகரத்து வேண்டும் என்று மாப்பிள்ளை கேட்கும் வரை, பாவம் அந்த பையன் ஒரு நோய்கார பெண்ணுடன் வாழமுடியாமல் மனமுடைந்து போயுள்ளான் என்று காதியாரும் பரஸ்பரம் சொல்லும் வரை இந்த மருமகனின் உண்மையான உள்நோக்கம் யாருக்குமே தெரியாது.

இதனால் குறித்த பெண் மட்டுமல்லாது அப்பெண்ணின் பெற்றோரும் துன்பப்பட்டார்கள்.  அத்துடன் காதி நீதிமன்றத்துக்கு சென்றால் அங்கு குறித்த பெண்ணுக்கு தலாக் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் காதியாரும் செயற்பட்டதை எண்ணி நொந்துபோனார்கள். மாறாக அந்த பெண்ணின் எந்த நியாயத்தையும் கேட்கவில்லை. இன்றுவரை அவர;கள் தமது பிள்ளைக்காக கொடுத்த  பொருட்களை பெற்றுக்கொடுக்கவுமில்லை. பெறக்கூடிய எந்த முயற்சியும் இடம்பெறவில்லை.

இறுதியில் குறித்த கணவரோ அவளுக்குச் சொந்தமான உடைமைகளைக் கொண்டே இன்னொரு இளம் பெண்ணை மறுமணம் புரிந்துள்ளார். வாழ்க்கையுமில்லை சொத்துமில்லாமல் துன்பப்படுகிறாள். இவ்வாறான செயற்பாடுகளால் பெண்கள் தமது வாழ்க்கையிழந்து உடமையிழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு எமது  பெண்கள் படும் துன்பத்திற்கு நாம் வழங்கக்கூடிய பரிகாரம் என்ன?  விவாகரத்தானது இலகுவாக பெறக்கூடிய நிலையை மாற்றி கடுமையான விதிகளை கொண்டு வருவதன் மூலம் இது சாத்தியப்படுமா?

4 comments:

  1. இவ்வாறு பல சம்பவங்கள் எம் சமூகத்தில் நடைபெறுகின்றன .வேண்டா பொண்டாட்டி கால் பட்டா குற்றம் .கை பட்டால் குற்றம் என கலட்டி விட நினைக்கும் ஆண்களும் இரு தரப்பு நியாயம் சொல்லும் காதி என்ற பெயரில் புழைப்பு நடத்தும் மாமாக்களும் மலிந்து விட்டனர் .இவர்களுக்கான தண்டனைகளை பெற்றுக்கொடுக்க மீண்டும் ஒரு மாமஆவிடம் செல்லாமல் உயர்நீதி மன்றத்தில் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்

    ReplyDelete
  2. இஸ்லாம் என்பது ஒரு பூரணமான, அறிவுபூர்வமான மார்க்கம், இந்த மார்கத்தில் இருந்து கொண்டு இப்படிகீழ்த்தரமாக நடக்கும் அய்யோக்கியர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், பெண்களிடம் இயல்பாகவே இருக்கின்ற பலவீனங்களை ஆண்கள் பயன் படுத்திக்கொள்ளும் நிலை இன்று பரவலாக காணப்படுகின்றது, அத்தோடு பக்குவம் அடையாத சிறு பிள்ளைகளை திருமணம் முடித்து கொடுப்பதனால், வாழ்க்கை பற்றிய எந்த அறிவும் இல்லாமல் வாழ்க்கைக்குள் நுழையும் அப்பாவிப்பெண் பிள்ளைகளுக்கு வாழ்க்கை மீதான வெறுப்பும், நம்பிக்கையற்ற தன்மையும் ஏற்படுகின்றது..பெண்களை ஏமாற்றும் ஆண்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் சில நாடுகளில் இருக்கின்றன ஏன் இலங்கையில் கூட பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கு எதிரான சட்டங்கள் இருக்கின்றன ஆனால் அவைகள் எந்த அளவில் நியாமான முறையில் இயன்க்குகின்றன என்பது கேள்விக்குறியே , இஸ்லாம் பற்றிய பிழையான கணிப்பீட்டுக்கு காதியார்கள் சிலரின் கீழ்த்தரமான செயற்பாடுகள் காரமாகின்றன வெறும் ஆயிரம் ரூபாக்களுக்கு அடிமையாகி எத்தனையோ காதியார்கள் கள்ளத்திருமணம்களை செய்து வைத்துள்ளார்கள் தெரியுமா? அவ்வாறே நியாயமான எந்த காரணமும் இல்லாமல் பல விவாகரத்துக்களை பணத்திற்காக கச்சிதமாக முடித்துள்ள காதியார்களும் இல்லாமல் இல்லை.
    இந்த விடயங்களில் இருந்து பெண்கள் மீள வேண்டும் என்றால் ஒரே வழிதான் உள்ளது அதுதான் கல்வி பெண்கல்வியின் அவசியத்தை இஸ்லாம் வெகுவாக வலியுறுத்தியுள்ளது, மிகச்சிறந்த அடிப்படைக்கல்வியின் மூலம் பெண்ணை தன்னம்பிக்கை உள்ளவளாகவும், ஆளுமை நிறைந்த ஒருவராகவும் உருவாக்க முடியும் கற்ற பெண்ணாக இருந்த்திருந்தால் கணவன் காட்டும் எல்லா ரிப்போர்ட் களையும் நம்பிக்கொண்டு அந்தப் பெண் இருந்திருக்க மாட்டாள், அடுத்தது இஸ்லாம் பற்றிய அடிப்படையான அறிவினை ஆண் பெண் இருபாலாருக்கும் சிறு வயது தொடக்கம் வழங்குவதில் பெற்றோர் அக்கறை காட்ட வண்டும், இஸ்லாமிய அறிவும் மனிதாபிமானமும் இருந்திருந்தால் அந்தக்கணவன் இப்படி கேவலமாக நடந்திருக்க மாட்டான், பரவலாக பெண்கள் ஏமாற்றப்படுவதட்க்கும் பாதிக்கப் படுவதட்க்கும் பக்கச்சார்பான தீர்ப்புக்களும் காரணமாகி விடுக்கின்றன... சமூக ரீதியில் மிக காத்திரம ஒரு கட்டமைப்பை கிராமங்கள் தோறும் நிறுவி பெண்களுக்கான அவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வையும்,பெண்கல்வி பற்றிய விழிப்பையும் நம்மால் உண்டு பண்ண முடியுமென்றால் இன்னும் பத்து வருடங்களில் இந்தக் காதிகளும், காவாலிகளும் காணாமல் போய் விடுவார்கள்.

    ReplyDelete
  3. அடிப்படியில் பெண்கள் இப்படி வ்ன்புனற்சிக்கும் தவறான புரிதலுக்கும் ஆளாக்கப்படுவது பருண்மையான கரணங்கள் உள்ளது இதற்க்கு இரு தரப்பிலும் தவறுகள் உள்ளமையலும் ஆண்களின் மீதான உண்மையாக புரிதல் இன்மையாலும் தவறுகள் கட்டவிழ்த்து விடப் படுகிறது அதாவது தான் தாய் தனது தம்மை தங்கை எல்லோருமே பெண்கதாம் என்ற கண்ணோட்டத்தை இன்றய சமூகம் புரிந்து கொவதில்லை ஒரு பெண்ணை தவற வழி நடத்தப் படுகிறபோது தான் வீட்டில் உள்ள ஒரு பெண் தவறாna கோணத்தில் சித்தரிக்கப் படுகிறாள் என ஒரு புரிதலை ஆண்கள் பெறுவதில்லை இப்படி இன்னும் இருந்தாலும் முறையான கல்வி முறையான வழிகாட்டல் இவற்றான் சமூகம் மாற்றம் அடையும்

    ReplyDelete
  4. பெண்களை ஏமாற்றுவதற்காக பல வழிமுறைகளை ஆண்கள் கையாள்கிறார்கள். அது உண்மை... அதற்கு எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ஆண்களின் இந்த சூழ்ச்சியில் ஏமாளிப் பெண்கள் மாத்திரமே ஏமாற்றப்பட்டு விடுகிறார்கள். இது நவீன காலம். ஆண்களுக்கு சமனாகவும் அவர்களை விடவும் பெண்கள் எல்லாத் துறைகளிலும் திறமைசாலிகளாகத் திகழ்கிறார்கள். இவ்வாறு அறிவில் சிறந்தவளான பெண், விழிப்புணர்வுடன் செயற்பட்டால் ஏமாற்றத்துக்கான இடமே இல்லை. பெண்களை ஏமாற்றலாம் என்ற விடயத்தில் ஆண்கள் தான் ஏமாந்துப்போய் விடுவார்கள்.

    ReplyDelete